லால்பேட்டை, மே-24

லால்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படவேண்டும் தமுமுக பொதுக்கூட்டத்தில் தீர்மானம்

கடலூர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் லால்பேட்டை பெருநகரம் சார்பாக “சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்” (23-05-2017) அன்று மர்ஹீம் S.A.முனவ்வர் ஹூசேன் நினைவு அரங்கம் லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோடில் நடைப்பெற்றது தமுமுக நகர செயலாளர் நூருல் அலீம் தலைமையில்  தாங்கினார்,

தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றியம்,நகரம்,பேரூர் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

தமுமுக நகர துணை செயலாளர் .கியாசுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதில் தமுமுக மூத்த தலைவர் முன்னால் வக்ஃபு வாரிய தலைவர் S.ஹைதர் அலி, மமக மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது. தமுமுக மாநில உலமாக்கள் அணி செயலாளர் M.Y.முஹம்மது அன்சாரி, தமுமுக தலைமை கழக பேச்சாளர் J.சலீம் கான் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் எழுச்சியுரையாற்றினார்கள்,

இக கூட்டத்தில்   லால்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி திறக்கப்படவேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக மமக நகர பொருளாளர் N.A.யாசிர் அஹமது கூறினார்  நிகழ்ச்சியில் ஆயிரகணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.