லால்பேட்டை,ஜுன் 26

லால்பேட்டை ஈத்கா குத்பா பள்ளிவாசலில் காலை 7.15 மணியளவில் நோன்பு பெருநாள்தொழுகைநடைபெற்றது.அவ்வமயம் தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் ஏ.இ.எம்.அப்துல்ரஹ்மான் ஹழ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார், ஜெ.எம்.ஏ.அரபிக்கால்லூரி முதல்வர் மௌலானா மௌலவி ஹாஃபிள் காரி ஏ. நூருல்அமீன் ஹள்ரத் அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தி குத்பா பேருரையாற்றினார் .

இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துக் கொண்டனர். காலை 6.30 மணியிலிருந்தே லால்பேட்டையிலுள்ள அனைத்து மஸ்ஜிதுகளிலிருந்தும் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடையணிந்து அணி அணியாக பெரியவர்களும்,இளைஞர்களும்,சிறுவர்களும் ஆர்வபெருக்குடன் கலந்துக் கொண்டனர். தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும்,அனைவரின் நல்வாழ்வுக்காகவும்,நலனுக்காகவும்,சமுதாய ஒற்றுமைக்காகவும் பிரார்த்தனை செய்தனர். மேலும் ஊரின் செழிப்பான,சிறப்பான முனேற்றத்திற்க்காகவும் துஆச் செய்யப்பட்டது. பிரார்த்தனைக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்து கரம் கொடுத்து ஆரத் தழுவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.