லால்பேட்டை,ஜுன் 28
லால்பேட்டை அல்ஜமா பைத்துல்மால் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் அபுதாபி லால்பேட்டை ஜமாத், துபை லால்பேட்டை ஜமாத், சவூதி அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாத் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் வைத்தனர்.

இறுதியாக இந்த வருடம் லால்பேட்டை அல்ஜமா பைத்துல்மால் சார்பில் வசூல் செய்யப்பட்ட ரூபாய் 4,30,000 ஜகாத் பணம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதற்காக செயலாற்றிய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு கூட்டம் நிறைவுப்பெற்றது.

இறுதியாக சவூதி அர்ரஹ்மான் ஜமாத் நிர்வாகிகளுக்கு அல்ஜமா உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.