மாணவர்களால் பெற்றோர்கள் படும் அவதி நாளுக்கு நாள்  கூடிக்கொண்டுதான் இருக்கிறது சமீப காலமாக தனியார் பள்ளிகளில் கலை  எடுக்கும் படலம்  தொடங்கி உள்ளது தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை பத்தாம் வகுப்பில் சேர்க்காமல் பெற்றோர்களை அழைத்து உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று டிசி கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள் தனியார் பள்ளி நிர்வாகம் கூறுவது என்னவென்றால் உங்கள்  பிள்ளை ஒன்பதாம் வகுப்பில் சரியான மார்க் எடுக்கவில்லை தெடர்ந்து இப்பள்ளியில் படித்தால் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்து விடுவான் எனவே அரசு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.

அரசு பள்ளியில் சேர்க்க மறுப்பு 
 .
எல்.கே.ஜி, முதல் ஒன்பதாம் வகுப்புவரை தனியார் பள்ளியில் படித்துவிட்டு பத்தாம் வகுப்பில்  அரசு பள்ளியில் மாணவர்களை  சேர்க்க வந்தால் அரசு பள்ளியும் பத்தாம் வகுப்பில் சேர்க்க மறுக்கிறது காரணம் 11 வருடங்கள் ஆங்கிலவழி பாடத்தை படித்துவிட்டு இப்போது தமிழ்வழி பாடத்தில் பத்தாம் வகுப்பில் சேர்த்தால் இந்த மாணவனால் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைய முடியாது இப்பொழுது இந்த மாணவனை ஒன்பதாம் வகுப்பில் தான் சேர்க்கமுடியும் என்று அரசு பள்ளியும் சொல்கிறது. மாணவன் ஒன்பதாம் வகுப்பில் சேர மறுக்கிறான் பெற்றோர்கள் தவிக்கிறார்கள்.  லால்பேட்டை  அரசு பள்ளியில் மாணவர்களும் பெற்றோர்களும் காத்திருக்கின்றனர் இதற்கு தீர்வு தான் என்ன..?
 .
பெற்றோர்கள் கவனத்திற்கு
 .
உங்கள்  பிள்ளைகளை தனியார் பள்ளியில் காசு கடுத்துதானே படிக்கவைக்கிறோம் என்று அலட்சியமாக இருந்து விடுகிறோம் ஆனால் தங்கள் பிள்ளைகளின் படிப்பு எப்படி இருக்கிறது என்று பள்ளிக்கு சென்று தெரிந்துக் கொள்கிறோமா இல்லை பள்ளி நிர்வாகம் டிசி கொடுக்கும்  போது கத்தி கூச்சலிடுகிறோம் அது தவறு பெற்றோர்களே தங்கள் பையன் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே  பள்ளிக்கு சென்று எனது பிள்ளையை  இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்க அனுமதிப்பீர்களா ? என்று கேளுங்கள் இதற்க்கு அந்த பள்ளி உத்திரவாதம் தரவில்லை என்றால் எட்டாம் வகுப்புடன் டிசி யை பெற்றுக்கொண்டு அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்து தொடர்ந்து படிக்க வைக்கலாம் பெற்றோர்களும் மாணவர்களும் பல  சிரமத்திலுருந்து விடுபடலாம்.