முஸ்லிம்கள் சட்டத்தை மதிப்பவர்கள் என்பதை இனியாவது உணருங்கள்…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யாவிட்டால் கமல் நடித்து வெளியாகும் திரைப்பட தியேட்டர்களை அடித்து நொருக்குவோம் என்றும்,தீயிட்டு கொளுத்துவோம் என்றும் இந்து மக்கள் கட்சி,சிவசேனா போன்ற கட்சிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

விஸ்வரூபம் திரைப்படத்தில் வரும் சில காட்சிகள் பொய்யானது என்றும்,அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டும் என முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தவுடன் பொங்கி எழுந்த கமலஹாசன் இதற்கு ஏன் எழவில்லை?

அதேப்போல இது அவருடைய கருத்து சுதந்திரம் என அவருக்கு ஆதரவு கொடுத்த மனுஷ்ய புத்திரன்,தா.பாண்டியன்,ராமதாஸ்,கருணாநிதி,பாரதிராஜா போன்றவர்கள் இதற்கு ஏன் வாய் திறக்கவில்லை?

விஸ்வரூபம் திரைப்படத்தில் வெளியாகும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குங்கள் என்று முஸ்லிம்கள் ஜனநாயக வழியில்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை தான் வைத்தார்களே தவிர வன்முறையை யாரும் கையில் எடுக்கவில்லை.

மேலும்,நீதிமன்றம் படத்தை வெளியிடலாம் என ஆரம்பத்தில் தீர்ப்பு கொடுத்தபோது மீண்டும் ஜனநாயக வழியில் அரசாங்கத்திடம் படத்தை தடை செய்யக்கோரி முறையீடு செய்தார்களே தவிர யாரும் தியேட்டர்களை முற்றுகை இடவில்லை,தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தவும் இல்லை.

ஆனால் பகிரங்கமாக தியேட்டர்களை உடைப்போம்,தீயிட்டு கொளுத்துவோம் என்றெல்லாம் இந்து மக்கள் கட்சியினர் பேசி வருவதற்கு அதுசம்பந்தமாக இதுவரை ஒன்றும் வாய் திறக்காம மௌனியாக உள்ளார் கமல்.

முஸ்லிம்கள் என்றால் மட்டும் ஒரு பார்வை,பிறர் என்றால் மட்டும் வேறு பார்வையா?

முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு அநீதி நடந்தாலும் அதை அவர்கள் ஜனநாயக வழியில்தான் கையாள்வார்கள் என்பதை இனியாவது கமலஹாசனும்,கருத்து சுதந்திர போராளிகளும் உணர்ந்து கொள்ளுங்கள்.

Thanks@Fb சையத் அமீர்