லால்பேட்டை, ஆகஸ்ட்-17

லால்பேட்டை நகர தமுமுக சார்பாக பேரூராட்சி செயல் அலுவலர். லால்பேட்டை அவர்களை இன்று சந்தித்தோம். எதிர்வரும் மழைக்காலத்தில் மழை நீர் வடிகாலான எள்ளேரி வாய்க்கால் தூர்ந்தும், சாக்கடையாக மாறியும் உள்ளதால் மழை நீர் வடியாமல் தேங்கி மெதுவாக செல்கிறது. இதே நிலை தொடர்ந்தால் பெரு மழை பொழியும் போது வீடுகளில் தண்ணீர் ஏறும் வாய்ப்புள்ளது. எனவே இந்த வாய்க்காலை அரியா மதகு தொடங்கி எள்ளேரி வரை தூர் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். மனுவும் கொடுத்தோம். மேலும் PWD யிலும் மனு அளிப்போம் என தெரிவித்தோம்.

சிங்காரவீதி எள்ளேரி ரோட்டில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் ஆங்காங்கே உள்ளன. அவற்றில் மழை நீர் தேங்கிகிறது. அதில் குழந்தைகளோ, வாகனங்களோ சிக்கினால் உயிர் போகும் அபாயம் உள்ளது. எனவே அவற்றை உடனே மூட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். EO அவர்கள், கூட்டு குடிநீர் திட்ட அலுவலருக்கு போன் போட்டு என்னிடம் கொடுத்தார். நான் விபரம் சொன்னேன். மேலும் வீராணம் ஏரிக்கரை லிம்ரா மருத்துவ மனை அருகில் உள்ள பள்ளத்தையும் சுட்டிக்காட்டினோம். உடனே சீர் செய்வதாக கூறினார்.

டெங்கு விழிப்புணர்வு செய்யவேண்டி அவர் எங்களை கேட்டுக் கொண்டார். அதற்கான கையேடுகளையும் வழங்கினார். பெற்றுக் கொண்டு நகர தமுமுக வினரிடம் ஒப்படைத்தோம்.

என்னோடு, மமக நிர்வாகியும், முன்னாள் பேரூராட்சி உதவி தலைவருமான அகமதலி, நகர செயலாளர் நூருல் அலீம், கியாஸ், அபுதாபி மண்டல தமுமுக துணை செயலாளர் அலி, மசூது, நாசர் மற்றும் பலர் வந்திருந்தனர்.

தாகவல்: எம்.ஒய்.முஹம்மது அன்சாரி மன்பஈ.
மாநில செயலாளர் தமுமுக உலமா அணி.