அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)

வல்ல ரஹ்மானின் கிருபையினால் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் 2017-2019 ஆம் ஆண்டின் மூன்றாவது நிர்வாக குழு கூட்டம் மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி18.08.2017 வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பின் பனியாஸ் சைனா கேம்ப் செயலாளர் சாதுல்லாஹ் அவர்கள் ரூமில் ஜமாஅத்தின் தலைவர் ஜனாப் J. யாசிர் அரபாத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் பனியாஸ் கேம்ப் ஜமாஅத் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இக்கூட்டத்தினை, மௌலவி. சைபுல்லாஹ் அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்,

வரவேற்புறையை பொதுச்செயலாளர். சிராஜுல் அமீன் அவர்கள் வழங்கினார்,

நன்றி உரையினை மக்கள் தொடர்பு செயலாளர். சாதிக் அலி கூறினார்,

இறுதியாக மௌலவி. சைபுல்லாஹ் அவர்கள் துஆவுடன் நிர்வாக குழு கூட்டம் மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள்:

1. லால்பேட்டை கொத்தவால் தெரு கடைசியில் உள்ள சாக்கடையை சரி செய்து தர கோரி பேரூராட்சி செயல் அலுவலருக்கு ஜமா அத் சார்பாக மனு அனுப்புவது.

2. பனியாஸ் பகுதிக்கு கூடுதல் செயலாளராக சகோதரர் மாருபத்துல்லாஹ் அவர்களை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

3. இந்த ஆண்டின் ஸதக்கத்துல் ஃபித்ரா 90,900/-, ரூபா வசூல் செய்யப்பட்டு பெருநாளை சிறப்பாக கொண்டாட ஊரில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது….
89 நபர்களுக்கு ரூபா 1,000/- மும்
1 நபர்க்கு ரூபா 900/- மும்
2 நபர்க்கு ரூபா 500/- வீதம் வழங்கப்பட்டது…

4. இவ்வாண்டு இப்தார் மொத்த வசூல் மற்றும் சிலவுகளை தெரிவிக்கபட்டது அதனுடைய கணக்குகளை செயற்குழுவில் சமர்பிப்பதாக தெரிவிக்கபட்டது.

இங்ஙனம்
அபுதாபி லால்பேட்டை ஜமா’அத்