ஹிதாயா சேவை மையத்தின்  மூன்றாம் ஆண்டு பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் 20-8-2017 ஞாயிறு இஷா தொழுகைக்குப்பிறகு சிதம்பரம் மெயின்ரோடு ஹாஜா பாவா சுவீட் கடை மேல் தளத்தில் நடைப்பெற்றது.

டாக்டர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை A.R. ஸலாஹுத்தீன் மன்பஈ இறைவசனம் ஓதி துவக்கிவைத்தார்.

அல்லாஹ்வின் உதவியால் கடந்த 3 ஆண்டுகளாக லால்பேட்டையில் மருத்துவ உதவி, ஏழைவீட்டின் மைத்திற்கு கஃபன் தஃபன் செய்தல் போன்ற சேவைகள் செய்து வரும் ஹிதாயா சேவைமையத்தின் பனி குறித்து விவாதிக்கப்பட்டது

2016,2017 க்கான வரவுசெலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் ஹிதாயா சேவை மையத்தை அரசு சட்டத்தின்படி பதிவு செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

2017,2019 ஹிதாயா சேவை மையத்தின் புதியதாக நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது.

புதிய நிர்வாகிகளின் விபரம்.

தலைவர் A.R. ஸலாஹுத்தீன் மன்பஈ,

செயலாளர் S.J. முஹம்மது புகாரி,

பொருளாளர்கள்
S.H முஹம்மது அய்யூப்
S.T.ஹில்லூர் முஹம்மது

உதவி தேவைப்படுவோரின் பரிந்துரை குழு.

M.J.பத்தஹுத்தீன்
A.S.அஹமது
ரியாஜுல்லாஹ் மன்பஈ,
ஹஜ் முஹம்மது

சுகாதார விழிப்புணர்வு நோட்டிஸிற்கான குழு.

டாக்டர் முஹம்மது யூசுப்,
இன்ஆமுல்லாஹ் மன்பஈ,
முஹம்மது இத்ரீஸ் மன்பஈ
நிஜார் அஹமது ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.