சென்னை பெசண்ட் நகர் டென்னிஸ் கிளப் சாலையில் நிறுவப்பட்டுள்ள குளிர் சாதன பெட்டி வசதியுடன் கூடிய இந்த உணவு சேமிப்பு மையம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது..

சென்னையை சேர்ந்த டாக்டர் ஈஸா ஃபாத்திமா ஜாஸ்மின் எனும் பல்மருத்துவரின் மனித நேயம் சார்ந்த சிந்தனையில் ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்பில் தனது சொந்த செலவில் உருவானது ஐயமிட்டு உண் என்னும் மையம்…

உணவகங்களில், வீட்டில் மீதமாகும் உணவுப் பொருட்களை இந்த சேமிப்பு மையத்தில் வைத்து விட்டு சென்றால் பசியால் வாடும் தேவையுள்ளவர்கள் உண்டு செல்ல வழி கிடைக்கும்.. டாக்டர் பாத்திமாவின் முயற்சியை பாராட்டும் பலரும் பழங்கள், பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்களை வாங்கி வைத்து விட்டு செல்கின்றனர்..
டாக்டர் பாத்திமா வின் அரிய முயற்சிக்கு உதவியாக அருகில் வசிக்கும் நிர்மல்குமார் என்பவர் ஃப்ரிட்ஜ் இயங்குவதற்கு தேவையான மின்சாரம் வழங்க முன்வந்துள்ளார்…

சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர போக்குவரத்து காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெற்றுள்ள டாக்டர் ஈஸா பாத்திமா ஜாஸ்மினின் பசியாற்றும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

படித்ததில் பிடித்தது Fb