லால்பேட்டை,ஆகஸ்ட்-23

கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை பெருநகரம் தமுமுக மற்றும் மமக சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் நேற்று  22-08-2017  மாபெரும் முகாம் மமக மாவட்ட துணை செயலாளர் ஹாஜா நஜிபுதீன் தலைமையிலும் மமக நகர செயலாளர் கியாசுதீன் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.

இம் முகாமை தமுமுக நகர செயலாளர் நூருல் அலீம் முகாமை துவக்கி வைத்தார்

அஸர் தொழுகைக்கு பிறகு லால்பேட்டை பெருநகரம் முழுவதும் வீடுகளிலும் பஸ்களிலூம் கொடுக்கப்பட்டது

இதில் தமுமுக மாநில உலமா அணி செயலாளர் M.Y.முஹம்மது அன்சாரி, தமுமுக மாவட்ட துணை தலைவர் முஹம்மது அய்யூப் மமக மாவட்ட செயலாளர் முஹம்மது நூஃமான் மற்றும்தமுமுக மமக நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இந்நிகழ்ச்சியில் 3500கும் மேலான பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .