அன்பின் நமதூர் சகோதரர்கள் அனைவருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்..
வரட்சி, குடிநீர் பற்றாக்குறை, குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆகிய பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, இதற்காக நாம் என்ன செய்ய முடியும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்று நாம் ஒதுங்கிக்கொண்டாள் அது நம் சந்ததிகளுக்கு நாம் செய்யப்போகும் மாபெரும் அநீதியே, காரணம் இதனால் நம்மை விட நம்முடைய சந்ததிகள் தான் பெரும் பாதிப்புகளை சந்திப்பார்கள், நம் பாட்டன், பூட்டன்மார்கள் எனக்கு சொத்துக்களையும், செல்வங்களையும் சேர்த்து வைத்ததற்கு பதிலாக மரங்களையும், குளங்களையும், நீர் வளத்தையும் விட்டு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நம் சந்ததிகள் ஏங்கும் காலம் வெகு தூரம் இல்லை.

நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற நீர் நிலைகளை, குளம் குட்டைகளை அழித்து மனை போட்டு வீடு கட்டிவிட்டோம், வாய்க்கால்களை சாக்கடையாகிவிட்டோம், ஆறுகளையும், ஏரிகளையும் சிறிது சிறிதாக ஆக்கிரமித்துவிட்டோம், மரங்களையெல்லாம் வெட்டி சாய்த்து மாளிகைகள் கட்டிக்கொண்டடோம், இப்படி எல்லா இயற்க்கை வளங்களையும் அழித்து நாம் தற்காலிக சுகங்களை அனுபவிப்பதற்க நம் வருங்கால வாரிசுகளுக்கு மீழ முடியாத வரட்சியை பரிசாக தரப்போகிறோம் என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்??

நாம் செய்த தவறுகளை சரி செய்ய நம்மால் இயன்ற பணிகளை செய்ய வேண்டிய அவசியமும் அவசரமும் நமக்கு தற்பொழுது எழுந்துள்ளது, அதன் அடிப்படையில் LALPET GREEN VISION 2022 என்ற பெயரில் ஐந்தாண்டு திட்டம் ஒன்றை தயார் செய்து அதன்படி பணிகளை மேற்கொண்டு 2022 ஆம் ஆண்டிற்குள் செழிப்பான பூமியாக நம் மண்ணை மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் இந்த அமைப்பை தொடங்க உள்ளோம்.

இயக்கங்கள் அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு எந்த அமைப்பையும் சாராமல் எல்லா இயக்க சகோதரர்களையும் உள்ளடக்கிய அமைப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், மனிதருக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒருங்கிணைத்து செய்ய ஆர்வமுள்ளவர்கள் எங்களை அணுகுமாறு அன்போடு அழைக்கிறோம்…. திட்டங்களும் செயல்பாடுகள் பற்றிய விவரங்களும்

LALPET GREEN VISION 2022 முதல் மூன்று ஆண்டுகளுக்கான திட்ட முன்வடிவு

✅நிர்வாகம்அமைத்தல்

தலைவர், செயலாளர், பொருளாளர் நியமித்து நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதல்

✅மரம் வளர்ப்பு
ஆண்டொண்டிற்கு 1000 மரக்கன்றுகள் வீதம் 2022 ஆம் ஆண்டிற்குள் குறைந்த பட்சம் 5000 மரக்கன்றுகள் நடுவது.

?நிழல் தரும் மரங்கள்.
வேப்ப மரம், புங்க மரம், சரக் கொன்றை (சரம் போல மஞ்சள் பூக்களைக் கொண்டவை), பூவரசு, செர்க்கோலியா, மந்தாரை, மரமல்லி, நாகலிங்கம் மற்றும் வில்வம் போன்ற நிழல் தரும் மரங்களை இலவசமாக தந்து ஒவ்வொரு வீட்டு தெரு வாசல் ஓரம் நட்டு பராமரிக்க வைப்பது.

?பயன் தரும் மரங்கள்.
மா, பலா, வாழை, தென்னை, கொய்யா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி, சீதாப்பழம், அரை நெல்லி, முழு நெல்லி, பப்பாளி போன்ற மரங்களை வீட்டு கொல்லைப்புறங்களில் நடுவதற்கு இலவசமாக வழங்குவது

?மழைநீர் சேமிப்பு
2017-2018
✔மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து பிரசுரங்கள், காணொளிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது.
✔பிளம்பிங் பணிபுரியும் நமதூர் சகோதரர்களுக்கு மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்கும் பயிற்சி அளிப்பது.
✔புதிதாக கட்டப்படும் வீடு உரிமையாளர்களை சந்தித்து மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வலியுறுத்துவது.
✔அதிகப்படியான மழைநீரை சேமிக்க பள்ளிவாசல்கள், திருமணமண்டபங்கள், காலனி குடியிருப்பு போன்ற பெரிய கட்டிடங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க வலியுறுத்துவது.

❌கருவேல மரம் அழிப்பு
✔பொது இடங்களில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி அந்த இடங்களில் மரக்கன்றுகள் நடுவது
✔தனியார் நிலங்களில் உள்ள கருவேலம் மரங்களை அகற்ற உரிமையாளரிடம் அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்வது

?நீர்நிலை பாதுகாப்பு
2017-2018

✔மதரஸா அல்லது பள்ளிவாசல்களுக்கு சொந்தமான குளங்களை தூர்வார நிர்வாகத்திடம் முறையாக அனுமதி கோரி கடிதம் மூலம் விண்ணப்பித்து, முறையான அனுமதியை பெறுவது.
✔வாய்க்கால், குளங்களில் சாக்கடைகளை கலக்கும் வீடு உரிமையாளர்களுக்கு அதை அடைத்து சரி செய்து கொள்ள குறிப்பிட்ட கால அவகாசம் வழங்குவது.

2018-2019
✔வாய்க்கால்,குளங்களை முழு வீச்சில் தூருவாரும் பணியை தொடங்குவது
✔குளங்களை சுற்றி மரக்கன்றுகள் நடுவது

இதை ஒவ்வொன்றாக செய்ய ஏகன் நமக்கு வலிமையை தருவானாக..