லால்பேட்டை,செப்டம்பர் .18

வல்ல ரஹ்மானின் நாட்டத்தால், தாருஸ்ஸலாமின் அறிமுக கூட்டம் மற்றும் லால்பேட்டையில் நற்பணிகளைசெய்து வரும் அரசியல் சாரா அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் 17-09-17 மாலை 5 மணிக்கு லால்பேட்டை மினாத்தெரு “மௌலவி இர்பான்” அவர்களின் இல்லத்தில், தாருஸ்ஸலாமின் தலைவர் மௌலவி முஜம்மீல் மன்பஈ அவர்கள் தலைமையில் சிறப்போடு நடைப்பெற்றது.

இதில் தாருஸ்ஸலாமின் செயல் திட்டங்கள் மற்றும் நமதூருக்கு ஆற்றிவரும் சேவைகள் விவரிக்கப்பட்டது.

மேலும் லால்பேட்டையில் அரசியல் சாரா நற்பணிகளை ஆற்றி வரும் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் விளக்கினார்கள்….
லால்பேட்டையின் நலன் சார்ந்த அனைத்து விசயங்களிலும் ஒன்று சேர்ந்து பயணிப்பது, இந்த அமைப்பின் நிர்வாகிகள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை சந்தித்து ஊரின் நலன் சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது….

இதில்….

ஹிதாயா_சேவை மன்றம் சார்பாக மௌலவி சலாஹுத்தீன், சகோ. முஹம்மது, மௌலவி சுலைமான். சிங்கார வீதி பைத்துல் மால் சார்பாக சகோ. ஆசிக் மற்றும் சகோ.பஹத், தோப்புத் தொரு நண்பர்கள் சார்பாக சகோ.சாதுல் சலாம், மௌலவி. இர்பான், லால்பேட்டை பசுமை புரட்சி நிர்வாகி சகோ. அஜிமுத்தீன், சகோ.பயாஜ், சகோ.முஹிபுல்லா, அல் அன்சார் அறக்கட்டளை சார்பாக சகோ. காமீல், மற்றும் தெற்க்குத் தோப்பு பகுதியை சார்ந்த நண்பர்கள் பலர் கலந்துக்கொண்டு தங்களின் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

நற்பணிகளை ஆற்றி வரும் அரசியல் சாரா அமைப்புகளை முதன்முதலாக தாருஸ்ஸலாம் ஒருங்கிணைத்ததை அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்…
இந்த நிகழ்ச்சியில் சகோ. A.R.இஸ்மாத், A.S.அஹமது மற்றும் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துக்கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கினார்கள்..
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை தாருஸ்ஸலாம் அங்கத்தினர்கள், சகோ. அஹமதுல்லாஹ், முஹம்மது இலியாஸ், சல்மான், ஜைனுல்லாஹ், அஜீஸ், மௌலவி ரியாஜ் மன்பயி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்..

இந்த நிகழ்ச்சியை அழகான முறையில் ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும்,இதில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் தாருஸ்ஸலாம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் உங்களின் ஆக்கங்களையும்,ஊக்கங்களையும் வரவேற்கின்றோம்…
இப்படிக்கு
தாருஸ்ஸலாம்
அபுதாபி