லால்பேட்டை, அக்-05
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் தற்போது வரை 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  1,200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

தற்போது கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகமும்  போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு  வருகின்றது.
டெங்கு காய்ச்சல் வராமல்  தடுக்க அனைத்து பகுதிகளிலும் நில வேம்பு கசாயம் போன்ற மருந்துகளை கொடுக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முதல்வர் அப்பள்ளி மாணவர்களுக்கு நில வேம்பு கசாயம் செய்து தரும்படி லால்பேட்டை  ஹிதாயா சேவை மைய நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டதிற்கு இனங்க இன்று 5-10-2017
லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி,லால்பேட்டை அரசு பெண்கள் உயர்நிலைப்பயின்  சுமார் 850 மாணவ மாணவிகள் மற்றும்  ஆசிரியர்களுக்கு   ஹிதாயா சேவை மையத்தின் சார்பாக நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இன் நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர், மற்றுமுள்ள ஆசிரியர்கள்,ஆசிரியைகள்  லால்பேட்டை பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் ஹிதாயா சேவை மைய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். எல்லா புகழும் இறைவனுக்கே.