அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)

வல்ல ரஹ்மானின் கருணையினால், ஜமாஅத்தின் 2017 – 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் செயற்குழு கூட்டம் 06-10-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின், மாலை 07:00 மணிக்கு Salam ரூமில் ஜமாஅத்தின் தலைவர் ஜனாப் J. யாசிர் அரபாத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஜமாஅத்தின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளையும் மற்றும் ஒப்புதலையும் வழங்கினார்கள்.
* இக்கூட்டத்தினை, மௌலவி அஸ்ரார் அஹம்மது மன்பஈ அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.
* வரவேற்புரை மற்றும் கடந்த செயற்குழு அறிக்கையை பொதுச்செயலாளர் A.சிராஜுல் அமீன் அவர்கள் வழங்கினார்.
* 13-05-2017 முதல் 06-10-2017 வரையுள்ள வரவு – செலவு கணக்குகள் பொருளாளர் ஹாஜி V.M.அஹம்மதுஅவர்களால் சமர்பிக்கப்பட்டது.
நன்றியுரையை ஜமாத்தின் தனிக்கையாளர் முஹம்மது சித்திக் வழங்கினார்.

இறுதியாக மௌலவி அப்துர் ரஹ்மான் ரப்பானி துஆவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது.
செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், தீர்மானங்களும் :
* சமர்பிக்கப்பட்ட வரவு-செலவு கணக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
* இப்தார் நிகழ்ச்சியின் கணக்குகள் சமர்ப்பிக்கப்படது.
* இப்தார் நிகழ்ச்சிக்காக உதவி செய்தவர்களுக்கும் மற்றும் இதற்காக உழைத்த அனைத்து ஜமாத் உறுப்பினர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
* வக்கீல் படிப்பிற்கான உதவியை வருடத்திற்கு ரூபாய் 50,000/- வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
* பனியாஸ் Camp இன், அவசர தேவைக்கான கையிருப்பு திர்ஹம் 2,000/- தை, திர்ஹம் 5,000/- மாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுவரை செய்யப்பட்ட உதவிகள் (மே2017 முதல் செப்டம்பர் 2017 வரை)
* திருமண உதவிகளாக: ரூபாய் 72,000/- (9 ஏழை குமர்களின் திருமணத்திற்கு).
* மருத்துவ உதவிகளாக : ரூபாய் 48,000/- (6 நபர்களுக்கு).
* JMA அரபிக் கல்லூரியின் பராமரிப்பு பணிக்காக அனுப்பியது : ரூபாய் 75,000/-,
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை Salam Room நண்பர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக செய்து இருந்தார்கள்…
அல்ஹம்துலில்லாஹ்.
இங்ஙனம்
அபுதாபி லால்பேட்டை ஜமா’அத்