லால்பேட்டை,அக்டோபர், 10

இன்று 10 -10 – 2017 செவ்வாய் கிழமை மதியம் 12 மணி அளவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர், மவ்லானா மவ்லவி P.A காஜா முயீனுத்தீன் பாகவி ஹள்ரத் அவர்கள், மாநில பொதுச் செயலாளர் மவ்லானா மவ்லவி V.S. அன்வர் பாதுஷா ஹள்ரத் அவர்கள் மற்றும் மாநில பொருளாளர் மவ்லானா மவ்லவி S. முஜிபுர் ரஹ்மான் ஹள்ரத் ஆகியோர் லால்பேட்டை நகரம் வருகை தந்தனர்.

ஷைகுல் ஹதீஸ் மவ்லானா மவ்லவி A.E.M. அப்துற்றஹ்மான் ஹள்ரத் கிப்லா அவர்களை சந்தித்தனர்

லால்பேட்டை நகரத்துக்கு வருகை தந்த ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகளுக்கு லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநில தலைவர், செயலாளர், மற்றும் பொருளாளர் ஆகியோர்களுக்கு லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக நகர தலைவரும், ஜாமிஆவின் முதல்வர், காஜி மவ்லானா மவ்லவி A நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் பொன்னாடை போர்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி A சபியுல்லாஹ் ஹள்ரத், காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி ஹாபிழ் காரி R.Z. முஹம்மது அஹமது ஹள்ரத், நகர செயலாளர் மவ்லானா மவ்லவி J. ஜாகீர் ஹுஸைன் ஹள்ரத் மற்றும் மாவட்ட, வட்டார, நகர ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்