லால்பேட்டை,அக்-13

தமிழ்நாட்டில் மிக அச்சுறுத்தலாக பரவிவரும்  டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக பல்வேறு சமுதாய இயக்கங்கள்  மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிலவேம்பு கசாயம் வழங்குதல் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் மக்களிடம் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு செய்தல் போன்ற சேவைகளை செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் லாபேட்டையில் கடந்த 3 வருடமாக இப்பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வரும் ஹிதாயா சேவை மையத்தின் சார்பில் வ.குளக்குடி, ரஹ்மத் நகர், டாக்டர் ஜாகிர் ஹுசைன் நகர் பகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது இதில் சுமார் 2000 பேர் பயன்பெற்றனர். 
வ.குளக்குடி ஜாகிர் ஹுசைன் நகர் பகுதியில் கொசுக்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் ஹிதாயா சேவை மையம் சார்பில் அப்பகுதியை சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.
லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோட்டில் பொதுமக்கள் 1000 பேருக்கு   நிலவேம்பு கசாயம் வழங்கக்கப்பட்டது.