எல்லா வல்ல அல்லாஹ்வின் பேரருளால் கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் உயர் நிலைக்குழு ஆலோசனை கூட்டம்

14/10/2017 சனிக்கிழமை அன்று வடலூர் மஸ்ஜிதே நூர் பள்ளிவாசலில்

மாவட்ட தலைவர் மவ்லானா மவ்லவி A.சபியுல்லாஹ் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

ஆரம்பமாக மவ்லானா மவ்லவி காரீ முஹம்மது அஹ்மது ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்

மாவட்ட செயலாளர் மவ்லானா மவ்லவி அப்துர்ரஜ்ஜாக் உலவி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

1.மாவட்ட தேர்தல் பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் 31/10/2017 செவ்வாய்க்கிழமை அன்று லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் மத்ரஸாவில் நடைபெறும்

தேர்தல் அதிகாரிகளாக ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் மவ்லானா மவ்லவி A.நுருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்களும் மற்றும் பேராசிரியர் மவ்லானா மவ்லவி J.ஜாஹிர் ஹுசைன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களும் செயல்படுவார்கள்

அனைத்து வட்டாரத்தின் செயளாலர்கள் தேர்தல் பணிக்குழுவினர்களாக செயல்படுவார்கள்

2. ஒவ்வொரு வட்டாரமும் பொதுக்குழுவை கூட்டி மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கான வேட்பாளரை முடிவு செய்து இன்ஷா அல்லாஹ் வரும் 25/10/2017 புதன்கிழமைக்குள் வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்

(தனிப்பட்ட முறையில் யாரும் வேட்பாளரை முன் மொழியக்கூடாது.)

3. வேட்பாளர்கள் வாபஸ் பெற கடைசி நாள் 29/10/2017 ஞாயிற்றுக்கிழமை

4. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகளுக்கு பணி சிறக்க வாழ்த்தி துஆ செய்யப்பட்டது

5. மாநில தேர்தலை மிக சிறப்பாக நடத்திய திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்து துஆ செய்யப்பட்டது

6.இக்கூட்டம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பையும் தந்துஉணவு மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து கொடுத்தவடலூர் மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல்நிர்வாகிகளுக்கும்

நெய்வேலி குறிஞ்சிப்பாடிவட்டார உலமாக்களுக்கும்நன்றி தெரிவித்து துஆ செய்யப்பட்டது

இறுதியாக மாவட்ட பொருளாளர் மவ்லானா மவ்லவி ஸலாஹுத்தீன் மன்பயீ நன்றிகூறினார்.