இன்று 18-10-2017 இஷா தொழுகைக்கு பிறகு லால்பேட்டை வடக்கு தெரு ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் S.T. முஹம்மது யூசுப் அவர்கள் தலைமையிலும், லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி A.R. நவ்வர் ஹுஸைன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்…

அல்லாஹ்வின் உதவியால் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டியின் சார்பாக வருடங்கள் தோரும் பல ஆண்டுகளாக ரபியுல் அவ்வல் மாதத்தில் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வரும் மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொர்பொழிவு பயானை
இன்ஷா அல்லாஹ் வருகின்றன 2017 ரபியுல் அவ்வல் மாதத்திலும் சிறப்பாக நடத்துவது எனவும்,
இவ்வருடம் தொடர் சொற்பொழிவு நிகழ்த்த மவ்லானா மவ்லவி ஹாபிழ் ஹாமீத் பக்ரி பாஜில்,மன்பஈ ஹள்ரத் அவர்களை அழைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.