லால்பேட்டை, அக்-20

தற்போது கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகமும்  போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு  வருகின்றது.

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுத்தல் மட்டுமே பயனளிக்கும் பிற தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இரண்டாம் பட்ச நடவடிக்கையாகும்..  மேலும் டெங்கு மஸ்தூர்களை கொண்டு கொசு  புழு வளர வாய்புடைய இடங்களை  கண்டறிந்து அழித்தல்.. போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகமும் சுகாதார துறையும் லாபேட்டையில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர் குறிப்பாக வீட்டு தோட்டத்தில் பயன்படுத்தாத மாவு அறைக்கும் குடைக்கல், பயன் படுத்தாத பழைய பாத்திரங்கள், பிளாஸ்டிக் டப்பாக்களில் தேங்கி நிர்க்கும் தண்ணீரில் டெங்கு கொசுவை  உற்பத்தி செய்யும்  புழுக்கள் உருவாக்கினறன இதை பொது மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் பல வீடுகளின்  தோட்டத்தை ஆய்வு செய்து வருகின்றனர் இதற்க்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
டெங்கு கொசுப் புழுவை அழிப்பதற்கு கம்போசியா மீன்களை லால்பேட்டையில் உள்ள   குளத்தில் விடப்பட்டது.