லால்பேட்டை, அக்-24

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்  மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் மற்றும் லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகமும்  போர்க்கால அடிப்படையில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றது.

லால்பேட்டையில்  கொசு தொல்லையால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவாமல் இருக்க    கொசு ஒழிப்பு பணி நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளது. 

லால்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி, அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, மற்றும் 8 வது வார்டு முழுவதும்   கொசு ஒழிப்பு மருந்தான பாகீங் புகை மருந்தினை   அடிக்கும் பணி நடைப்பெற்றது .  பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையிலான குழுவினர் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.