லால்பேட்டை, அக்-26

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் இல்லத் திருமணம்

தலைவர்கள் – உலமாக்கள் – அரசியல் – சமுதாய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களின் புதல்வரும், அமீரக காயிதே மில்லத் பேரவையின் அபுதாபி மண்டல மின்னணு ஊடகத்துறைச் செயலாளரும், அய்மான் சங்க செயற்குழு உறுப்பினருமான ஏ.எஸ். முஹம்மது இஸ்மாயில் B.C.A., மணாளருக்கும்,

ஹாஜி ஏ.எச் ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் புதல்வி எச். முஸ்பிரா B.A., மணாளிக்கும்,

இன்ஷா அல்லாஹ் 2017 அக்டோபர் 29 ஞாயிற்றுக்கிழமை காலை 10 – 30 மணியளவில் லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எக்ஸ்.எம்.பி., தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்விற்கு ஷைகுல் உலமா மௌலானா எஸ்.ஏ. அப்துர் ரப் ஹள்ரத், அஃப்ளலுல் உலமா மௌலானா ஏ. ஃபைஜுர் ரஹ்மான் ஹள்ரத், ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஏ.இ.எம். அப்துர்ரஹ்மான் ஹள்ரத், ஷைகுல் ஜாமிஆ மௌலானா ஏ. நூருல் அமீன் ஹள்ரத் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., கடலூர் மாவட்ட திமுக செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் எக்ஸ்.எம்.பி., ஒயிட் ஹவுஸ் ஏ. அப்துல் பாரி, நோபிள் குழும நிர்வாக இயக்குனர் எம்.எஸ். ஷாஹுல் ஹமீத், காயிதே மில்லத் ஆவணப்பட இயக்குனர் எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ், ஆலியா முஹம்மது டிரேடிங் நிர்வாக இயக்குனர் எம். ஷேக் தாவூத் மரைக்காயர், அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி, சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர் எஸ். முஹம்மது கவுஸ் மரைக்காயர், தீன் ஹஜ் சர்வீஸ் நிறுவனர் என். அஹ்மத் தம்பி, ஃபாத்திமா கனி ஹஜ் சர்வீஸ் நிறுவனர் வி. அப்துல் அஜீஸ், அய்மான் சங்க தலைவர் ஜே. ஷம்சுத்தீன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி. ஹமீத் உள்ளிட்டோர் திருமண நிகழ்வில் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இத் திருமண விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில – மாவட்ட – நகர நிர்வாகிகள், MYL – MSF – STU ஆகியவற்றின் நிர்வாகிகள், அமீரக காயிதே மில்லத் பேரவை, அய்மான் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், சங்கைமிகு உலமாக்கள், ஜமாஅத்தார்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் – சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பிக்க இருக்கின்றனர்.

அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொதுச்செயலாளர் எஸ்.கே.எஸ். ஹமீதுர் ரஹ்மான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளர் யூ. சல்மான் பாரிஸ் வரவேற்று பேசுகிறார்.

திருமண நிகழ்வில் பங்கேற்க வருகை தரும் தலைவர்கள் – உலமாக்கள் – அரசியல் – சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்டோரை வரவேற்க, லால்பேட்டை நகர முஸ்லிம் லீக்கினர் – MYL – MSF – STU ஆகியவற்றின் நிர்வாகிகள் – மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.