அல்லாஹ்வின் பேரருளால்இன்று 28/10/2017 லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் மக்தப் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வர் மவ்லானா மவ்லவி ஹாபிழ் காரி.A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமை வகித்து மக்தப் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பாடங்கள் நடத்தப்பட வேண்டிய முறைகள் குறித்து அறிவுரை வழங்கினார்கள்.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் நிர்வாகக்குழு செயலாளர் ஹாஜி S.H. அப்துஸ்ஸமது அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி S.A. சைபுல்லாஹ் ஹள்ரத் அவர்கள் மக்தப்களின் சிறப்பு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்கள்.

குர்ஆனை முழுமையாக பார்த்து ஓதி முடித்து மேலும் தீனியாத் இரண்டு பாகங்களையும் முடித்த மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சான்றிதழ் வழங்கப்படும்,

தினமும் காலை ஒன்றரை மணி நேரமும், மாலை மஃரிப் தொழுகையிலிந்து இஷா பாங்கு சொல்லப்படும் நேரம் வரையிலும் மக்தப்கள் நடத்தப்பட வேண்டும் என்றும்

மேலும் மக்தப் கல்வியின் மேம்பாடு மாணவர்களின் மேம்பாடு குறித்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இக்கூட்டத்தில் ஆண் மாணவர்கள் கல்வி பயிலும் 28 மக்தப்களின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.