லால்பேட்டை.அக்-29

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கல்வி மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் லால்பேட்டையில்  உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் அவலநிலை குறித்து ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி நமது இணையதளத்தில் செய்தி பதிவு செய்து இருந்தோம் அதை தொடர்ந்து முதல்வர் தனிப்பிரிவு, கல்வி அமைச்சர், மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் ஆகியோருக்கு ஈ மெயில் வாயிலாக புகார் அனுப்பப்பட்டது முதல்வர் தனிப்பிரிவு இந்த புகாரை சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பியுள்ளதாக தகவலும் வந்துள்ளது இதுவரை எந்த அதிகாரியும் இப்பள்ளியை ஆய்வு செய்யவில்லை.

டெங்கு காய்ச்சலை தடுக்க லால்பேட்டை பேரூராட்சி பெரும் பணியை செய்து வருகின்றது ஆனால் லால்பேட்டையில் அரசு பள்ளியில் டெங்கு கொசு வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது உயிருக்கும் சுகாதாரத்துக்கும் உத்திரவாதம் இல்ல பள்ளிக்கு எங்கள் பிள்ளைகளை அனுப்பமாட்டோம் என்று பெற்றோர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்.
==========================
லால்பேட்டை,ஆகஸ்ட்-22
 /
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கல்வி மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் லால்பேட்டையில்  உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின்  அவலநிலை
 /
இப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் ஆறு ஆசிரியர்கள் பனி செய்கின்றனர் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சுகாதாரம் தேவை, பாதுகாப்பு தேவை, அடிப்படை வசதி தேவை, சுகாதாரமான தண்ணீர் தேவை என்று பாடம் நடத்துகின்ற ஆசிரியர்களுக்கு தெரியவில்லை இப்பள்ளியின் அவலநிலையை அரசுக்கு தெரிவித்தார்களா என்றும் தெரியவில்லை அனைத்து பள்ளிகளுக்கும் இன்டர்நெட் வசதி செய்து தரப்படும் என்று கல்வித்துறை அறிவிப்பு செய்கிறது முதலில் கழிப்பிட வசதியும் சுகாதாரமான குடிநீர் பாதுகாப்பான பள்ளியை அமைத்துக் கொடுத்தாலே போதும்.
 /

மாணவர்கள் உல்லாசமாக விளையாட சர்க்கள்  

மாணவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அருந்தும் இடம் 

மாணவர்கள் குடிநீர் தொட்டி  உள்புறம் டெங்கு காய்ச்சலுக்கு தேவையான   

கொசுக்கள் வளர்ப்பு மையம்  பள்ளியின் வெளிப்புறம் தூய்மை லால்பேட்டை பேரூராட்சி  மாணவர்கள் இங்கு விளையாடினாள் அவசியம் ஹெல்மெட் அணியவேண்டும் இல்லையெனில் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.  இங்குள்ள தென்னை மரத்தின் தேங்காய் மற்றும் மட்டை அனைத்தும் பள்ளி மைதானத்தில் தான் விழும்  சமையல்கூடம் அருகில் தூய்மை கொசு வளர்ப்பு மையம்
பள்ளியின் உள் பகுதியில் உள்ள இடம்  மாண்வர்கள் கழிவறை ஆண்கள்- பெண்கள்