லால்பேட்டை.அக்-31
கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தேர்தல் பொதுக்குழுக்கூட்டம் இன்று 31/10/2017 லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில்  நடைபெற்றது.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வர் கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி A நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமை வகித்து தேர்தல் அதிகாரியாக இருந்தார்கள்

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஹதீஸ் A.E.M அப்துற்றஹ்மான் ஹள்ரத் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்
காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி ஹாபிழ் காரி R.Z. முஹம்மது அஹமது ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்

காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மவ்லானா மவ்லவி R.S.P.அபுல் பைசல் மன்பஈ அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார்கள்
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி ஜாகீர் உசேன் ஹள்ரத் அவர்களும் மற்றும் மாவட்டத்தின் அனைத்து வட்டார செயளாலர்கள் தேர்தல் பணிக்குழுவாக செயல்பட்டனர்

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து வட்டார உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைக்கு வரும் மூன்று ஆண்டுகளுக்கு
தலைவராக விருத்தாசலம், மவ்லானா மவ்லவி A சபியுல்லாஹ் மன்பஈ ஹள்ரத் அவர்களும்

மாவட்ட பொதுச் செயலாளராக லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி S. முஹம்மது அலி மன்பஈ ஹள்ரத் அவர்களும்

மாவட்ட பொருளாளராக பரங்கிப்பேட்டை மவ்லானா மவ்லவி ஷேக் ஆதம் மளாகிரி ஹள்ரத் அவர்களும்
தேர்வு செய்யப்பட்டார்கள்

இறுதியில் காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாளர் மவ்லானா மவ்லவி வஜ்ஹுல்லாஹ் மன்பஈ ஹள்ரத் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்