லால்பேட்டை,நவ-03

கடலூர் மாவட்டம் லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2016 – 2017 ஆம் ஆண்டில்  பனிரெண்டாம் வகுப்பு  படித்த 189 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.இளங்கோவன் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாக உறுப்பினர் எம்.ஜே.பத்தஹூத்தின், துணை தலைமை ஆசிரியர் வி.கங்காதரன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.  இதில் ஆசிரியர் எஸ்.ரமேஷ்,கார்த்திகேயன்,விஜயகுமார் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்துக்கொண்டனர்.