கடலூர் மாவட்டத்தில் உள்ள உலமாக்களுக்கு அடையாள அட்டை புதுப்பித்தல் முகாம் வருகின்ற 08-11-2017 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தகவல் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரிவோர், அரசு நலத்திட்ட உதவிகளை பெற உலமா அட்டை அரசால் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் உலமாக்கள் (ம) இதர பணியாளர்கள் நல வாரியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இதன் மூலம் பள்ளிவாசல், தர்கா, மதரஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளோருக்கு இவ்வாரியத்தில் உறுப்பினார்களாக பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

உறுப்பினர்கள் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமணம் உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு உதவித் தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து நிவாரணம், மூக்கு கண்ணாடி ஈடு செய்ய உதவித் தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். உறுப்பினர்களில் பதிவை 3 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் புதுப்பித்தல் செய்தல் வேண்டும்.

உறுப்பினரின் பதிவை புதுப்பித்தலுக்கு வருகின்ற 08-11-2017 மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது, அவ்வமயம் இவ்வாhpயத்தில் உறுப்பினர்கள் பதிவை உரிய காலத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.