லால்பேட்டை அல்அலீம் ஹஜ் & உம்ரா சர்வீஸ் சார்பாக இன்று இமாம்புகாரி பள்ளியில் நடைபெற்ற பயிற்சி தர்பியா, மிகச்சிறப்பாக நடந்தது.
நிகழ்விற்கு இமாம்புகாரி பள்ளி தாளாளர் மவ்லவி எம்ஒய் முஹம்மது அன்சாரி மன்பயீ தலைமை ஏற்றார்.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் பேராசிரியர் மவ்லானா, மவ்லவி V.R.அப்துஸ்ஸமது ஹஜ்ரத் உம்ரா விளக்க சிறப்புரையாற்றினார்.
மவ்லவி முஹம்மது ஃபாஹிம்.ஹஸனி, மவ்லவி ஹாஜாமைதீன் மன்பயீ வாழ்த்துரை வழங்கினர்.

அல் அலிம் ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் மவ்லவி M.Y. அப்துல் அலிம் சித்திக் மன்பஈ அவர்கள் உம்ரா செய்முறை விளக்கத்தை பற்றி உறையாற்றினார்,

இந்நிகழ்ச்சியில் உம்ரா பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகள் அவர்களின் குடுப்பத்தினர்கள், முக்கிய பிரமுகர்கள் , உற்றார் உறவினர்கள், முபித் அஹம்மது, முஹிபுர்ரஹ்மான், முஹம்மது, முஹம்மது உட்படபளர் கலந்துக்கொண்டனர்

வரும் 15 – 11 – 2017 அன்று உம்ரா புறப்பட உள்ள குழுவினரும், மற்றும் ஆர்வமுள்ள பெருமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
உம்ரா குழுவினருக்கு அழகிய டிராவல் பேக், ஹேண்ட் பேக், இடுப்பு பெல்ட், மற்றும் பயன்தரும் பொருட்கள் வழங்கப்பட்டன.
மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்