ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு அமீரக ஷார்ஜா ஆட்சியாளர்களின் சிறப்பு விருந்தினராக அழைக்கபட்டு கலந்து கொண்டு வரலாற்று சிறப்புமிக்க உரை நிகழ்த்திய திமுக செயல்தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்களை அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்ததோடு தளபதி அவர்களிடம் இந்திய தூதரகத்தில் தமிழ் தெரிந்த அலுவலர்களை பணியில் அமர்த்த ஆவனை செய்யுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

தளபதி அவர்கள் கோரிக்கை மனுவை பெற்று கொண்டு அதை நிச்சியம் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
இந்த நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த சமுதாயப் புரவலர் நோபில் மரைன் ஷாஹூல் ஹமீத் ஹாஜியார் அவர்களுக்கு ஜமாஅத்தின் சார்பாக நன்றியயையும் தெரிவித்தனர்.