அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்தின் ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் கடந்த 10/11/2017 (வெள்ளி கிழமை) அன்று பத்தாவில் உள்ள ஜமா’அத்தின் தலைவர் ஜனாப் S. M. முஹம்மது நாஸர் அவர்களின் ரூமில் இஷா தொழுகைக்கு பிறகு (7 மணிக்கு) தொடங்கி நடைபெற்றது.

தலைவர் ஜனாப் S. M. முஹம்மது நாஸர் அவர்களின் தலைமை உரையுடன் கௌரவ தலைவர் Y. நியமத்துல்லாஹ் அவர்களின் முன்னிலையில் ஜமா’அத்தின் உறுப்பினர் A. யாசிர் அஹ்மத் அவர்களின் கிரா’அத்துடன் தொடங்கியது.

ஜமா’அத்தின் வரவு செலவு கணக்கறிக்கைகளை செயலாளர் A. தௌஃபிக் அஹ்மத் அவர்கள் வாசித்தார். கடந்த ஜூன் 17, 2017 முதல் நவம்பர் 10, 2017 வரை செய்த நமது ஜமா’அத்தின் செயல்பாடுகள் வருமாறு:-
1, ரமதான் மாத ஃபித்ரா விநியோகம் (45 நபர்கள்) – 45,000/-
2, திருமண உதவிகள் 11 (பதினொன்று) – 1,10,000/-
3, மருத்துவ உதவிகள் 7 (ஏழு) – 50,000/-
4, கல்வி உதவி 1 (ஒன்று) – 10,000/-

இச்செயற்குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகளாக ஜமா’அத்தின் மாதாந்திர சந்தா வசூல் மற்றும் 4-ஆவது பொதுக்குழு கூட்டம் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது, முடிவில் 12/01/2018 (வெள்ளி கிழமை) பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்துவது என இக் கூட்டத்தில் முடிவு செய்யபட்டது.

பொதுக்குழு கூட்டத்திற்கான உணவு செலவினங்களை ஜமா’அத்தின் இணை செயலாளர் ஜனாப் O. H. சல்மான் ஃபாரிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
நிர்வாகிகள்.
அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்,
ரியாத் – சவூதி அரேபியா.