2018-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம்க ளிடமிருந்து, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. சென்னை, எண். 13, மகாத்மா காந்தி சாலை, (நுங்கம்பாக்கம் நெடுஞ் சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2018-க்கான விண்ணப்ப படிவங்களை 15-11-2017 முதல் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இவ்விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அடுத்த மாதம் 7-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.