லால்பேட்டை,நவ-19

காட்டுமன்னார்குடி லால்பேட்டை வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு 18 – 11 – 2017 சனிக்கிழமை காலை 10 மணியளவில் லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி ஹாபிழ் காரி R.Z.முஹம்மது அஹமது ஹஜ்ரத் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மவ்லவி R.S.P.அபுல் பைசல் மன்பஈ அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார்

இக்கூட்டத்தில் கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் துணை தலைவராக மவ்லவி A.R.ஸலாஹுத்தீன் மன்பஈ அவர்களையும் மாவட்ட துணை செயலாளராக மவ்லவி முஹம்மது அஸ்அத்மன்பஈ அவர்களையும் மாவட்ட நிர்வாகம் முன்மொழிந்ததை ஓர்மனதாக ஏற்றுக் கொள்ளுவது மாநில ஜமாஅத்துல் உலமா சபையிக்கு 11 பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யப்பட்டது.

மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையிக்கு 15 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யப்பட்டது

மாவட்ட, வட்டார மற்றும் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் கூட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் போன்ற செய்திகள் அனைத்து உலாமாகளுக்கும் பரவலாக சென்றடைய

1.மவ்லவி மாசுமுல்லாஹ் மன்பஈ
2. மவ்லவி ரியாஜுல்லாஹ் மன்பஈ
3. மவ்லவி நூருஸ்ஸலாம் மன்பஈ
4. மவ்லவி முஹம்மது இப்ராஹிம் ஹஸனி
ஆகியோரை பொருப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டது பொருளாளர் மவ்லவி வஜ்ஹுல்லாஹ் ஹள்ரத் அவர்கள் நன்றி கூறினார்கள்.