லால்பேட்டை,நவ-22
லால்பேட்டையில் நியாய விலைக்கடைகளில் சக்கரை விலை உயர்வை கண்டித்து தி.மு.க கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 22 /11/17 அன்று காலையில் நடைப்பெற்றது இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு தி.மு.க லால்பேட்டை நகர செயலாளர் ஹாஜா மைதீன் தலைமை வகித்தார் .
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் மெளலானா தளபதி ஏ. ஷபீக்குர்ரஹ்மான், தி.மு.க மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் , இ.யூ. முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் ஏ.ஆர். அப்துர் ரஷீத் லால்பேட்டை நகர தலைவர் எம் .ஓ.அப்துல் அலி , செயலாளர் முஹம்மது ஆசிஃப் , இளைஞரணி செயலாளர் சைபுல்லா , முஹம்மது அன்வர், ஹஸன் , மாணவர் அணி அஸ்கர் ,மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் கியாசுத்தீன் , செயலாளர் அலீம் மற்றும் நிர்வாகிகள் தி.மு.க ஊராட்சி செயலாளர்கள் பாஸ்கரன் , பாலு , முஹம்மது அலி , ராஜேந்திரன் , பாரூக் , சொக்கலிங்கம் , செல்வம் , அப்துல் ரஹீம் ,யாக்கூப் , ஜெமில் , பாஸித் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.