அல்லாஹ்வின் பேரருளால் 3-12-2017 ஞாயிறு மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி நடத்தியமீலாது நபி விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

J.M.A அரபுக் கல்லூரி முதல்வர், கடலூர் மாவட்ட தமிழ் நாடு அரசு காஜி மவ்லானா,மவ்லவி ஹாபிழ் காரி A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

லாலகான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி A.R. நவ்வர் ஹுஸைன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்

மவ்லவி முஹம்மது சுலைமான் மன்பஈ கிராஅத் ஓதினார்

மாணவி நூருன் நஜ்மா இஸ்லாமிய கீதம் பாடினார்

மவ்லவி S.J.முஹம்மது வரவேற்புரை நிகழ்தினார்

மவ்லானா மவ்லவி தளபதி A. ஷபீகுர்ரஹ்மான் ஹள்ரத் அவர்கள் துவக்கவுறையாற்றினார்கள்

ஐக்கிய சமாதான பேரவை தலைவர், மவ்லானா,மவ்லவி, ஹாபிழ், T.M.N.ஹாமீத் பக்ரி மன்பஈ ஹள்ரத் அவர்கள்
பேருரை நிகழ்த்தினார்கள்

மவ்லவி அப்துர்ரஹ்மான் சிப்லி,ஜாமிஆவின் பேராசிரியர்கள் மவ்லானா மவ்லவி ஹாபிழ் A.முனவ்வர் ஹுசைன் ஹள்ரத், மவ்லானா மவ்லவி S.A.சைபுல்லாஹ் ஹள்ரத், மவ்லானா மவ்லவி V.A. அப்துஸ்ஸமது ஹள்ரத் மவ்லானா மவ்லவி மதார்ஷா ஹள்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி செயலாளர் S.H.அப்துஸ்ஸமது, முஹம்மது ஹாரிஸ்,முத்ததவல்லிகள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் கட்டுரை போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் T.A.அபுசுஹுது அவர்கள் நன்றி கூறினார்.