லால்பேட்டை,டிசம்பர் 06

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இன்று லால்பேட்டையில் கடைகள் அடைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் சிதம்பரம் சாலை, காயிதே மில்லத் சாலை, கடைத்தெரு, கைகாட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

அதேபோல், வெற்றிலை, காய்கறி மார்க்கெட்டுகளும் அடைக்கப்பட்டிருந்தது. அதேபோல், காட்டுமன்னார் குடியில் முஸ்லீம் வர்த்தகர்களும் தங்கள் கடைகளை அடைத்திருந்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.