லால்பேட்டையில் உத்தம நபியின் உதயதின விழா

தீனுல் இர்ஷாத் இளைஞர் நற்பணி செயலகம் சார்பில் நடைபெறுகிறது

லால்பேட்டை புதுப்பள்ளிவாசல் வளாகத்தில் தீனுல் இர்ஷாத் இளைஞர் நற்பணி செயலகம், புதுப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் மற்றும் சீரத் கமிட்டி ஆகியோர் இணைந்து 21 ஆம் ஆண்டு உத்தம நபியின் உதயதின விழாவை நடத்த இருக்கின்றனர்.

இவ்விழாவின் தொடக்கம் 2017 டிசம்பர் 20 ஆம் தேதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக்கல்லூரியின் முதல்வரும், தமிழக அரசின் கடலூர் மாவட்ட காஜியுமான மௌலானா, ஹாஃபிழ், அல்ஹாஜ் ஏ. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையிலும், புதுப்பள்ளிவாசல் முத்தவல்லி அல்ஹாஜ் வி.ஜே. குத்புத்தீன் மற்றும் ஜமாஅத்தார்கள் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற இருக்கின்றது.

திண்டுக்கல் பேகம்பூரைச் சார்ந்த மௌலானா, அஷ்ரஃபுல் பயாண், அல்ஹாஜ் ஏ.எஸ்.எம். முஹம்மது ஹாரூண் தாவூதி ஃபாஜில் தேவ்பந்த் ஹள்ரத் அவர்கள் முதல் 7 நாட்களும்,

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலானா, அல்ஹாஜ் எஸ். முஹம்மது அலி ஃபாஜில் மன்பஈ ஹள்ரத் அவர்கள் இரண்டாவது 7 நாட்களும், புரட்சித் தலைவர் முஹம்மது முஸ்தஃபா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய வாழ்க்கை வரலாற்றை பற்றி பல்வேறு தலைப்புகளில் தொடர் சொற்பொழிவாற்ற இருக்கின்றார்கள்.

மற்றும் ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக்கல்லூரியின் பேராசிரியர்களும், உலமா பெருமக்களும் கலந்துக் கொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.

மாநபியின் மகத்தான வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் இவ்விழாவில் அனைவரும் கலந்துக் கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அனைவரும் வருக! அறிவமுதம் பருக!

அழைப்பின் மகிழ்வில்…

புதுப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள்,
தீனுல் இர்ஷாத் இளைஞர் நற்பணி செயலகம் & சீரத் கமிட்டி,
லால்பேட்டை.