அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரக்காத்தஹு

வல்ல ரஹ்மானின் கருணையினால், ஜமாஅத்தின் 2017 – 2019 ஆம் ஆண்டின் நான்காம் செயற்குழு கூட்டம் 29-12-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின், சலாம் ரூமில் ஜமாஅத்தின் தலைவர் ஜனாப் J. யாசிர் அரபாத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஜமாஅத்தின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளையும் மற்றும் ஒப்புதலையும் வழங்கினார்கள்.

* இக்கூட்டத்தினை, தாஹா பாய் அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.

* வரவேற்புரை மற்றும் கடந்த செயற்குழு அறிக்கையை பொதுச்செயலாளர் A.சிராஜுல் அமீன் அவர்கள் வழங்கினார்.

* 06-10-2017 முதல் 29-12-2017 வரையுள்ள வரவு – செலவு கணக்குகள் மற்றும் டிசம்பர்,2016 முதல் டிசம்பர்,2017 வரையுள்ள வரவு – செலவு கணக்குகள் பொருளாளர் ஹாஜி V.M.அஹம்மதுஅவர்களால் சமர்பிக்கப்பட்டது.

நன்றியுரையை ஜமாத்தின் தனிக்கையாளர் முஹம்மது சித்திக் அவர்கள் வழங்கினார்.

இறுதியாக நூருல் அமீன் துஆவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது.

செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், தீர்மானங்களும் :

* சமர்பிக்கப்பட்ட வரவு-செலவு கணக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* சந்தா வசுல் செய்த கொடுத்த செயலாளர்களின் பெயர்களையும் வருட சந்தா தொகயினையும் வாசித்து அவர்களுக்கு ஜமா அத் தலைவர் அவர்களால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

* ஜமாத் நிர்வாகத்தின் அனுமதி இன்றி முன்னாள் மற்றும் இன்னால் நிர்வாகிகள் அமீரகத்தில் சகோதர அமைப்புகள் நடத்தும் பொது நிகழ்ச்சிகளில் ஜமா அத்தின் சார்பாக கலந்துகொள்ளகூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜமா அத் லெட்டர் பேடில் பிரதி இட்டு அனைத்து சகோதர அமைப்புகளுக்கும் அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

*ஜமாஅத் முன்னாள் நிர்வாகிகள் , ஜமாத் நிர்வாகத்திற்கு தொடர்ந்து இடையூராக செயல்படுவதாக எலுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு, எழுத்து பூர்வமான பதிலை ஜமாத்தின் மக்கள் தொடர்பு செயளாலரிடம் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

செய்யப்பட்ட உதவிகள் – அக்டோபர்,2017 முதல் டிசம்பர்,2017 வரை.

* திருமண உதவிகளாக: ரூபாய் 8,000/- (1 ஏழை குமரின் திருமணத்திற்க்கு).

* மருத்துவ உதவிகளாக : ரூபாய் 8,000/- (1 நபருக்கு).

*. கல்வி உதவிகளாக : ரூபாய் 105,300.00/- (4 நபர்களுக்கு).

* பள்ளிவாசல் மற்றும் மதரஸா பராமரிப்பு பணிக்காக அனுப்பியது : ரூபாய் 30,000/-,

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை Salam Room நண்பர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக செய்து இருந்தார்கள்…

இங்ஙனம்

அபுதாபி லால்பேட்டை ஜமா’அத்.