லால்பேட்டை,ஜனவரி 04

லால்பேட்டை புதுப்பள்ளிவாசல் வளாகத்தில் தீனுல் இர்ஷாத் இளைஞர் நற்பணி செயலகம், புதுப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் மற்றும் சீரத் கமிட்டி ஆகியவற்றின் சார்பில் 21 ஆம் ஆண்டு உத்தம நபியின் உன்னத வரலாற்று நிறைவு விழா 2018 ஜனவரி 03 ஆம் தேதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக்கல்லூரியின் முதல்வரும், தமிழக அரசின் கடலூர் மாவட்ட காஜியுமான மௌலானா ஏ. நூருல் அமீன் ஹள்ரத் தலைமையிலும், புதுப்பள்ளிவாசல் முத்தவல்லி வி.ஜே. குத்புத்தீன், முன்னாள் முத்தவல்லிகள் ஏ.எம். ஜாஃபர், எம்.எம். அப்துல் லத்தீஃப், லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜே. அப்துல் ஹமீத், சீரத் கமிட்டி எம்.எம். முஹம்மது இக்பால் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.

புதுப்பள்ளிவாசல் இமாம் மௌலானா அதாவுல்லாஹ் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்வை துவக்கி வைக்க, செயலகத்தின் செயலாளர் யூ. சல்மான் ஃபாரிஸ் வரவேற்று பேசினார்.

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர்கள் மௌலானா காரி ஆர்.இஜட். முஹம்மது அஹ்மத் ஹள்ரத், மௌலானா வி.ஆர். அப்துஸ் ஸமத் ஹள்ரத், மௌலானா எம். முஹம்மது காசிம் ஹள்ரத், மௌலானா மதார்ஷா ஹள்ரத், மௌலானா ஏ. முனவ்வர் ஹுசைன் ஹள்ரத், மௌலானா எஸ். முஹம்மது அலி ஹள்ரத், புதுப்பள்ளிவாசல் இமாம் மௌலானா ஏ. ரிழ்வானுல்லாஹ் ஹள்ரத், மௌலானா தளபதி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான் ஹள்ரத், மௌலானா எம்.ஒய். முஹம்மது அன்சாரி ஹள்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

திண்டுக்கல் மௌலானா ஏ.எஸ்.எம். முஹம்மது ஹாரூண் ஹள்ரத் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில் கேள்வி – பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

செயலகத்தின் தலைவர் ஓ.எச். முஹம்மது மன்சூர் நன்றியுரை நிகழ்த்த துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் உலமாக்கள், ஜமாஅத்தார்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தீனுல் இர்ஷாத் இளைஞர் நற்பணி செயலகத்தினர், புதுப்பள்ளிவாசல் ஜமாஅத்தினர், சீரத் கமிட்டியினர் உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.