சிதம்பரம், ஜனவரி 6-
மத்திய அரசு கொண்டு வரும் முத்தலாக் தடை மசோதாவை வேறொடு ஒழிக்க போராடுவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 2018, 5ம் தேதி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை கடலூர் மாவட்ட தலைவர் ஏ.சபியுல்லா மன்பஈ தலைமை வகித்தார்.

அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் , உலமாக்கள் , ஜமாஅத்தார்கள் முன் னிலை வகித்தனர்.சிதம்பர வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் எம்.முஹம்மது ஷிப்லி ரஹ்மானி அனைவரை யும் வரவேற்று பேசினார்.ஜமாஅத்துல் உலமா சபை வழிகாட்டு குழு தலைவர் ஷைகுல் ஹதீஸ் ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹள்ரத் , கடலூர் மாவட்ட அரசு காஜியும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி முதல்வருமான மவ்லானா ஏ.நூருல் அமீன் ஹள்ரத் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் மவ்லானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் , தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் முனவ்வர் பாஷா , தமுமுக மாநில உலமாக்கள் அணி செயலாளர் எம்.ஒய்.முஹம்மது அன்சாரி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை துணைச் செயலாளர் கே.எம்.ஷாகுல் ஹமீது பாக்கவி நன்றி கூறினார்.கண்டன கூட்டத் தில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் , சமுதாய பிரமுகர்கள் , உலமா பெருமக்கள் , ஜமாஅத்தார்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவு பேருரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ பேசிய தாவது :-மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை யுடைய பிஜேபி அரசு இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக தொடர் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறது .

அதன் ஒருபகுதியாக முத்தலாக் தடை மசோதா என்ற ஒரு மசோதாவை கொண்டு வந்து அதன் மூலம் முஸ்லிம்களை பிரித்தாலும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது. சூழ்ச்சிகளை புதிதாக பிஜேபியினர் செய்யவில்லை 40 ஆண்டுகளுக்கு முன்னலிருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் கொள்கை அமைப்பான பிஜேபியும் செய்து வருகிறது.

1947 ஆம் ஆண்டு மார்ச் – 28 அரசியல் நிர்ணய சபையில் இந்திய திருநாட்டில் எவைகளையெல்லாம் சட்டமாக்கலாம் என்ற ஆலோசனை செய்யப்பட்ட போது மஸானி என்பவர் பொதுசிவில் சட்டம் உருவாக்க வேண்டும் என்று கூறினார் . கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியா இங்கு எல்லா மதத்தவரும் அவர அவர்களது உரிமைப்படி வாழ வேண்டும் என்று கூறினார்கள் அதனடிப் படையில் எல்லாரின் கருத்துக்களை கேட்டு அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு அதன் சரத்து 25 , 26 மதச்சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

1968 ஆம் ஆண்டு திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விவாதம் தமிழக சட்டமன்றத்தில் எழுந்த போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேலப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ரவண சமுத்திரம் எம்.எம்.பீர் முஹம்மது எழுந்து இஸ்லாமிய ஷரியத் என்பது உலகளாவிய சட்டம் இதனை மனிதர்கள் உருவாக்கவில்லை நபிகள் நாயகம் ஸல் அவர்களாலும் உருவாக்கப்பட்டவில்லை இறைவனால் அருளப்பட்ட ஷரியத் சட்டத்தை மாற்ற ஒரு போதும் அனுமதிக்க முடியாது வேண்டும் என்றால் இம்மன்றத்தில் விவாதம் செய்ய நான் தயார் என்று பேசினார்கள். 1984 அலகாபாத் நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் என்பவர் இஸ்லாமிய ஷரியத் முறைக்கு மாற்றமான தீர்ப்பை வழங்கியபோது இந்திய மக்களவையில் ஷாபானு வழக்கு விவகாரம் குறித்து 12 மணிநேரம் முஸ்லிம் லீக் தலைவர் முஜாஹிதே மில்லத் குலாம் முஹம்மது பனாத்வாலா பேசியதை தொடர்ந்து ஷரியத் சட்டம் பாதுகாக்கப்பட்டது. ஆக எல்லா நிலைகளிலும் ஷரியத்திற்கு எந்த ஆபத்து வந்தாலும் அதனை முறியடிக்கும் செயலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்திருக்கிறது என்பதையெல்லாம் உரையில் குறிப்பிட்டிருக் கிறேன் .

முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிராக முஸ்லிம் சமுதாயம் கொதித்தெழுந்திருக்கிற இந்நிலையில் முஸ்லிம் தனியார் சட்டவாரியம் எடுக்கும் முடிவுகளுக்கும் , தமிழகத்தில் ஜமாஅத்துல் உலமா சபை எடுக்கும் முடிவு களுக்கும் பக்கபலமாக இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்படும்.

மஹல்லா ஜமாஅத்தை கட்டுக்கோப்புடன் காத்த மோயானால் சரியான முறையில் செயல்பட் டோமானால் நமக்கான பிரச்சனைகளை நாமே தீர்த்துக்கொண்டால் நமக்கு எதிரான சட்டம் எதுவும் வராது குரலும் எழாது. மார்க்க விசயத்தில் ஜமாஅத்துல் உலமா சபை எடுக்கும் நிலைக்கு நாம் எல்லோரும் கட்டுப் பட்டால் ஒன்றுப்பட்டு நின்றால் எல்லா நிலைகளிலும் வெற்றிகளை பெற முடியும்.இவ்வாறு கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ பேசினார்