லால்பேட்டை நகர தமுமுக மற்றும் முஹம்மது சதக் A.J கல்லூரி இணைத்து நடத்திய மாணவர் வழிகாட்டு கருத்தரங்கம் 05-01-2018 அன்று லால்பேட்டை நூர் மஹாலில் நடைபெற்றது,

நிகழ்ச்சிக்கு தமுமுக நகர தலைவர் கியாசுதீன் தலைமை வகித்தார், தமுமுக மாநில செயலாளர் அலாவுதீன், முஹம்மது சதக் கல்லூரி பேரா. மாணிக்கம், பேரா. ஞானசேகரன், பேரா. டாக்டர் மணிவண்ணன், பேரா.குணசேகரன் ஆகியோர் மாணவர்கள் எந்த பாடத்தை தேர்ந்தெடுக்கலாம், எந்த பாடம் படித்தால் என்ன வேலை கிடைக்கும் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி, மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்றினர்,

நிகழ்ச்சியில் பனிரெண்டாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லால்பேட்டை நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.