கடலூர் மாவட்டம், லால்பேட்டை பேருராட்சியில் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவ்வூருக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அரசு மருத்துவமனை இல்லை என்ற தகவல் அதிர்ச்சியளித்தது.

30 ஆயிரம் மக்கள் வசித்து வரும் லால் பேட்டை நகரின் மக்களின் நன்மை கருதி உடனே அரசு மருத்துவமனை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வலியுறுத்தி பேசினார்.

அதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் அபூபக்கர் எம்.எல்.ஏ கோரிக்கை யையேற்று உடனே ஆவன செய்ய உறுதியளித்தார்.

தகவல் :- சட்டமன்ற உறுப்பினரின் தனிச் செயலர் அப்துல் ஜப்பார் ,