அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்தின் 4 – ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடந்த 12/01/2018 (வெள்ளிக் கிழமை) அன்று பத்தாஹ்வில் உள்ள கிளாசிக் ஹாலில் மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு மிகச்சிறப்பான முறையில் ஜமாத்தின் உறுப்பினர் ஜனாப் A. முஹம்மது யாசிர் அவர்களின் இறைவசனத்துடன் (கிரா’அத்) இனிதே துவங்கியது.

இந்நிகழ்ச்சியை ஜமா’அத்தின் தலைவர் ஜனாப் S. M. முஹம்மது நாசர் அவர்கள் தலைமை ஏற்று நடத்த, கௌரவ தலைவர் ஜனாப் Y. நியமத்துல்லாஹ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

ஜமாத்தின் பொதுச்செயலாளர் ஜனாப் A. தௌஃபிக் அஹ்மது அவர்கள் வரவேற்புரை வழங்க, ஜமாஅத்தின் அவசியம், சதகா மற்றும் ஒற்றுமை என்ற தலைப்பில் ரியாத் மண்டல இஸ்லாமிய தஃவா சென்டர் அழைப்பாளர் மௌலவி M. M. நூஹ் அஃல்தாபி அவர்கள் வருகை தந்து சிறப்புரை வழங்கினார்கள், துணை பொருளாளர் ஜனாப் T. J. சைபுல்லாஹ் அவர்கள் 2016 மற்றும் 2017 ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கைகளை தாக்கல் செய்தார்.

2018 – 2019 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வை தணிக்கையாளர் ஜனாப் M. A. இம்தாதுல்லாஹ் அவர்கள் முன்னின்று நடத்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக உறுப்பினர் ஜனாப் M. Y. முஹம்மது பைசல் அவர்களின் நன்றியுரையுடன் இவ்விழா இரவு உணவுக்கு பிறகு இனிதே முடிந்தது.

2018-2019 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விவரம்:-

கெளரவ தலைவர்: ஜனாப் Y. நியமத்துல்லாஹ் அவர்கள்

தலைவர்: ஜனாப் S. M. முஹம்மது நாசர் அவர்கள்

பொதுச்செயலாளர்: ஜனாப் T. N. முஹம்மது இக்பால் அவர்கள்

துணை பொதுச்செயலாளர்: ஜனாப் M. Y. முஹம்மது பைசல் அவர்கள்

பொருளாளர்: ஜனாப் P. A. முஹம்மது யாசின் அவர்கள்

தணிக்கையாளர்: ஜனாப் M. A. இம்தாதுல்லாஹ் அவர்கள்

இன்ஷா அல்லாஹ் துணை தலைவர், துணை பொருளாளர், இணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வரவிருக்கும் செயற்குழுவில் அறிவிக்கப்படுவார்கள்.

தங்கள் அன்புள்ள

ஜனாப் T. N. முஹம்மது இக்பால்
பொதுச்செயலாளர்
அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்
ரியாத் – சௌதி அரேபியா.