லால்பேட்டை: ஜனவரி 24

லால்பேட்டை மருத்துவர் முடிதிருத்தும் தொழிலாளர்நல சங்கத்தின் 72வது ஆண்டுவிழா 23.01.2018 அன்று சங்க வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பாக பணிபுரிந்த விஸ்வநாத இளைஞர் மன்றம் சார்பாக இளைஞர் அணியின் 16 உறுப்பினார்களுக்கு 4கிராம் விதம் தங்க மொதிரம் பரிசாக வழங்கப்பட்டபது. சங்க உறுப்பினர் 39 நபர்களுக்கு பரிசுகள் வழங்கி பொன்னாடைபோர்த்தி கவுரவபடுத்தப்பட்டது.

சமீபத்தில் விபத்தில் மரணம்அடைந்த முடிதிருத்தும் தொழிலாளர் ஒருவரின் குடும்பத்திற்க்கு குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.மேலும் பல தீமானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்வில் லால்பேட்டை மருத்துவர் முடிதிருத்தும் தொழிலாளர்கள் அனைவர்களும் கலந்து கொண்டனர்.