அபுதாபி , ஜுன் 16

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி (15-6-2017) வியாழன் மாலை அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைப்பெற்றது.

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஜெ.யாசிர் அரபாத் அலி தலைமை தாங்கினார்.

ஜமாஅத்தின் மூத்த தலைவர் அப்துல் ஹாதி அவர்கள் முன்மொழிய துணை பொருளாளர் முஹம்மது யாஸீன் வழி மொழிந்தார்.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி பேராசிரியர் காரி முஹம்மது அஹம்மது ஹள்ரத் இறைவசனம் ஓத பொதுச்செயலாளர் ஏ.சிராஜீல் அமீன் வரவேற்புரையாற்றினார்.

ஜமாஅத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி அறிமுக உரையாற்றினார்.

ரமலானின் மகத்துவம் குறித்து தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் மவ்லானா மவ்லவி ஏ.முஹம்மது ரிழா பாஜில் பாக்கவி , லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி பேராசிரியர் காரி முஹம்மது அஹம்மது ஹள்ரத் ஆகியோர் உரையாற்றினார்.

இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில பொருளாளர் கோவை சாதிக் அலி, நம் சமுதாயத்தின் இன்றைய நிலை குறித்து உரையாற்றினார்.

சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் ஊடகவியல் மற்றும் எழுத்தாளருமான ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார்.

மவ்லானா மவ்லவி ஹூசைன் மக்கி மஹ்லரி, சமுதாய புரவலர் நோபல் மரையன் சாகுல் ஹமீது, பனியாஸ் பில்டிங் மெட்டீரியல் நிர்வாக இயக்குனர் அப்துல் ஹமீது மரைக்காயர், அய்மான் சங்க முன்னாள் தலைவர் அதிரை சாகுல் ஹமீது, அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான், இந்திய முஸ்லிம் பேரவை காதர் மீரான் பைஜி, மனித நேய கலாச்சார பேரவை அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர், அபுதாபி தமிழ்ச்சங்க தலைவர் ரெஜிணால்டு ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

ஜமாஅத்தின் பொருளாளர் ஹாஜி வி.ஏ.அஹமது நன்றி கூறினார்.

மவ்லவி முஜம்மில் மன்பஈ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் லால்பேட்டை ஜமாஅத் பெருமக்கள், பல்வேறு ஊர் ஜமாஅத் பிரதிநிதிகள், உலமாக்கள், சமுதாய சேவையாளர்கள் பலர் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.

பெண்களுக்கு தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததையொட்டி பெண்களும் அதிகமளவில் கலந்துக்கொண்டனர்.