லால்பேட்டை  : பிப்ரவரி 05,

லால்பேட்டை முஸ்லிம் ஜமா அத் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் சிறுபான்மை விரோத போக்கை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது .

முஸ்லிம் ஜமாஅத் தலைவர் J.அப்துல் ஹமீது தலைமை தாங்கினார் மௌலவி A.சலாவுதீன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட அரசு காஜி,A. நுாருல்அமீன் ஹஜ்ரத், ஐக்கிய சமாதான பேரவை தலைவர் ஹாமீது பக்ரீ, வி.சி., கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலர் சிபிசந்தர், எழுத்தாளர் மதிமாறன் கண்டன உரையாற்றினர்.

நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய அரசை கண்டிப்பது. இந்தியாவில் சிறுபான்மை, தலித் மற்றும் ஏழை மக்களை அச்சுறுத்தும் வகையிலும் புது புது யுக்தியை கையாளும் மத்திய அரசை கண்டிப்பது.

வீராணம் ஏரியின் தண்ணீரை வெற்றிலை கொடிக்காலுக்கும் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் திறந்து விட வேண்டும். லால்பேட்டையில் அரசு மருத்துவமனை உடனே அமைக்க ஆவண செய்யவில்லையென்றால், சாலை மறியல் செய்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.