லால்பேட்டையில் அரசு மருத்துவமனை அமையப்பெற முயற்சிக்க கோரி கடந்த 2 மாதத்திற்கு முன் லால்பேட்டை வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ விடம் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கை சம்மந்தமாக (அப்துல் ஜப்பார் அவர்களிடம் தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் முயற்சி கேட்டறிந்து வந்தோம்)

அக்கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்திலும் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., அவர்கள் லால்பேட்டையில் அரசு மருத்துவமனை கொண்டு வர வலியுறுத்தி பேசினார்கள்.

அரசிற்கு எழுத்துப்பூர்வமாக அபூபக்கர் எம்.எல்.ஏ எழுதிய கடிதத்திற்கு அரசின் கூடுதல் செயலாளர் திரு.அன்பு எம்.ஏ., அவர்கள் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் தங்களின் கடிதம் இத்துறைக்கு கிடைக்கப்பெற்றது அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரியப்பணிக்கப்பட்டுள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.