லால்பேட்டை  : மார்ச் 03,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன நாளான மார்ச் 10 அன்று அனைத்து பிரைமரிகளிலும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி ஏற்ற நிகழ்ச்சியினை நடத்திடுமாறு மாநில தலைமை நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில் லால்பேட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் அவசர ஆலோசனைக்கூட்டம் 2-03-2018 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.அப்துர் ரஷீத் , தெற்கு மாவட்ட தலைவர் கே.ஏ.அமானுல்லா , மாவட்ட கவுரவ ஆலோசகர் எஸ்.ஏ.அப்துல் கப்பார் , லால்பேட்டை
நகர தலைவர் எம்.ஓ.அப்துல் அலி , செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிப் , முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பொருளாளர் ஏ.எஸ்.அஹமது , தலைமை நிலைய பேச்சாளர் யூ.சல்மான் ஃபாரீஸ் , நகர துணை தலைவர் ஃபாரூக் , இளைஞர் அணி அமைப்பாளர் சைபுல்லா , நகர தொழிலாளர் அணி ஹசன் , முஸ்லிம் மாணவர் பேரவை தலைவர் அஸ்கர் அலி , மாவட்ட துணைச் செயலாளர் ஆசிக் அலி , எம்.எஸ்.எஃப் அசாருதீன் , முஜாஹித் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

மார்ச் 10 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன நாளையொட்டி லால்பேட்டை நகரில் உள்ள அனைத்து (முஸ்லிம் லீக்) கொடிகம்பங்களிலும் நட்சத்திரம் பதிந்த பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றுவது எனவும் , லால்பேட்டை புதுபஜார் (அலுவலகம் அருகில்) தெருமுனை விளக்க கூட்டம் நடத்துவது எனவும் ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.