லால்பேட்டை  : மார்ச் 10,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 71 ஆம் ஆண்டு நிறுவன தின கொடியேற்று விழா மற்றும் பேரணி நிகழ்ச்சி லால்பேட்டை நகரில் 10/3/2018 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

லால்பேட்டை நகர தலைவர் எம்.ஒ.அப்துல் அலி தலைமை வகித்தார்.

மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.அப்துர் ரஷீத் , கடலூர் தெற்கு மாவட்ட கவுரவ ஆலோசகர் எஸ்.ஏ.அப்துல் கப்பார் , தலைமை நிலைய பேச்சாளர் யூ.சல்மான் பாரீஸ் , நகர இளைஞர் அணி செயலாளர் சைபுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிப் அனைவரையும் வரவேற்றார்.

நகர எம்.எஸ்.எஃப் நிர்வாகிகள் அஸ்கர் அலி , அஹமதுல்லா , ஆசிக் அலி ஆகியோர் வாகன பேரணியை நெறிப்படுத்தினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் , கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் கே.ஏ.அமானுல்லா , நகர பொருலாளர் ஏ.எம்.ஜாஃபர் , நகர முன்னோடிகளான ஏ.எஸ்.சைபுல்லா , மவ்லவி ஜமால் அஹமது , சி.ஏ.பக்கீர் முஹம்மது , ஓ.பி.முஹம்மது ஹசன், எஸ்.எம்.அப்துல் வாஜிது ஆகியோர் நகரின் பல்வேறு இடங்களில் கொடி ஏற்றி வைத்தனர்.

எம்.எஸ்.எஃப் மாநில பொருளாளர் ஏ.எஸ்.அஹமது , நகர இளைஞரணி தலைவர் பி.எம்.அப்துல் காதர் ,ஏ.ஜெ.ஃபாரூக் , எஸ்.ஏ.ஹபீபுர் ரஹ்மான், ஜியாவுதீன், எம்.ஹெச்.முஹிபுல்லா , ஏ.உபைதுர் ரஹ்மான், எஸ்.ஏ.தாஹா முஹம்மது , முஹம்மது அலி , அபுல் ஹசன் , எம்.எஸ்.சைபுல்லா , ஹசன் , பி.எம்.முஹம்மது தைய்யூப் , ஹபிபுல்லா , ஏ.ஆர்.மர்ஜூக் , கே.எஸ்.சபியுல்லா , ஹலிக் , ஹாஜிமியான் , எம்.எஸ்.சித்தீக் , நஜ்புதீன் , பஜ்லுதீன் , ஜெமீல் , வி.ஜே.குத்புதீன் , அன்வர் , எம்.ஏ.தாஜுதீன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஜமாஅத்தார்கள் திரளாக கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

முஸ்லிம் மாணவர் பேரவை நிர்வாகிகள் மிகச் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு பணிகளை செய்திருந்தது .