துபை, ஜுன் 17

லால்பேட்டை துபாய் லால்பேட்டை ஜமாத்தின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி (16-6-2017) வெள்ளி மாலை துபை லோண்ட் மார்க் ஹோட்டலில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு துபாய் லால்பேட்டை ஜமாஅத் தலைவர் M.H.முஹம்மது பஷீர் தலைமை தாங்கினார்.

மவ்லவி A.அப்துல்சமது மன்பஈ இறைவசனம் ஓத பொதுச்செயலாளர் மவ்லவி A.R.ரியாஜில்லா மன்பஈ வரவேற்புரையாற்றினார்.

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் ஜனாப் M.சுஹைப்புதீன் அறிமுக உரையாற்றினார்.

சிறப்பு பயான் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி பேராசிரியர் காரி முஹம்மது அஹம்மது ஹள்ரத் அவர்களும் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் ஊடகவியல் மற்றும் எழுத்தாளருமான ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார்.

M.F.சபீர் அஹமது நன்றி கூறினார்.