லால்பேட்டை  : மார்ச் 20,

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் புனித புகாரி ஷெரீஃப் 42-ஆம் ஆண்டு நிறைவு விழா

19/03/2018 திங்கள் கிழமை மாலையில் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி தாருத் தப்ஸீர் வளாகத்தில் நடைப்பெற்றது ஜெ.எம்.ஏ அரபிக்கல்லூரி முதல்வர் மெளலானா காஜி ஏ. நூருல் அமீன் ஹஜ்ரத் தலைமை வகித்தார் நகர ஜமாஅத்துல் உலமா துணைச் செயலாளர் பேராசிரியர் மெளலானா மதார்ஷா மன்பஈ வரவேற்றுப் பேசினார் ஷைகுல் ஹதீஸ் மெளலானா ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிப் பேழையான அல் ஜாமி ஊ ஷஹிஹூல் புஹாரி நூலில் பதிவுச் செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களை பற்றி ஆய்வுப் பேருரையாற்றினார் .

ஜாமிஆவின் பேராசிரியர்களான மெளலானா முஹம்மது காஸிம் மன்பஈ , மெளலானா முஹம்மது அலி மன்பஈ ஆகியோர் உரையாற்றினர்

மாவட்ட ஜமாஅத்துல் உலமா துணைத் தலைவர் மெளலவி ஏ.ஆர். சலாஹுத்தீன் மன்பஈ நன்றி கூறினார்
இந்நிகழ்ச்சியில் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் செயற்குழு உறுப்பினர் மெளலானா தளபதி ஏ. ஷபீக்குர்ரஹ்மான் மன்பஈ , ஜெ. எம்.ஏ அரபிக் கல்லூரி தலைவர் ஜெ. அப்துல் ஹமீது , செயலாளர் கே.ஏ.அமானுல்லா , பொருளாளர் ஏ. ஆர். அப்துர் ரஷீத் , மெளலானா முனவ்வர் ஹஸன் , மெளலானா எம். ஓய் .முஹம்மது அன்ஸாரி , மெளலானா ஜாக்கிர் உசேன் , மெளலானா வி.ஆர். அப்துஸ் ஸமது , மெளலானா எஸ்.ஏ.சைபுல்லா நகர ஜமாஅத்துல் உலமா பொருளாளர் மெளலவி ஏ .கே.லியாகத் அலி வட்டார ஜமாஅத்துல் உலமா பொருளாளர் மெளலவி அபு பைசல் மற்றும் உலமாக்கள், அனைத்து மஸ்ஜிதுகளின் முத்தவல்லிகள் , ஜெ.எம்.ஏ . அரபிக் கல்லூரியின் நிர்வாக குழுவினர் ஜமாஅத்தார்கள் திரளானோர் பங்கேற்றனர்.