எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் முதல் கட்டமாக 15.03.2018 அன்று துபைல் ரூமிலும் இரண்டாம் கட்டமாக 22.03.2018 அன்று தஸ்லீம் ரூமிலும் மூன்றாம் கட்டமாக 23.03.2018 அன்று சபீர் பாய் இல்லத்திலும் நடைபெற்றது.

இதில் ஜமாஅத்தின் நிர்வாகிகளை சந்தித்து ஜமாஅத்தை வளர்ச்சியோடும் மீண்டும் புத்துணர்வோடும் செயல்படுத்த நிர்வாகிகள் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.அதனை தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் வரும் வாரங்களில் நிர்வாகிகளை சந்திப்பது மற்றும் வரும் ஏப்ரல் 13 அன்று மாலை கத்தார் கார்னிச்சில் மியூஸியம் அருகில் மாலை 6 மணியளவில் பொதுக்குழு கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இப்பொதுகுழுவில் கத்தார் வாழ் லால்பேட்டை ஜமாஅத்தினர் தவறாமல் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.